Dry Ginger Powder (Sukku Powder)

Benefits :

பித்தம் தொடர்புடைய நோய்களுக்கு

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ‘ பேசில்லஸ்” பாக்டீரியா தோற்றுவிக்கும்

வயிற்றுப்போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி, ஆகியவற்றிர்கு மருந்தாக பயன்படுகிறது.

காலைநோய்

எனப்படும் தலைச்சுற்றல் – வாந்தி போக்கக்கூடியது.. கிருமிகளுக்கு எதிரானசெயல், வயிற்று நோய்கள், மற்றும் சிலவகை உணவு நச்சுத்தன்மையாக மாறுவதை தடுக்கும்.

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

மாரடைப்பு, ஆஸ்துமா குணமாகும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால்

ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குணமாகும்

முகப்பொலிவிற்கு இஞ்சி – தேன்

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் கட்டுப்படும். ஆயுள் பெருகும்.

முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும்.

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து வரும் இரைப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரை நோய்க்கு மருந்து

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.

வலி நிவாரணி

வாந்தியுடன் கூடிய மயக்கத்தை போக்குகிறது. பயணநோய், மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் ஏற்படும் வாந்தி மயக்கத்திற்கு சிறந்த மருந்து. தசைவலி மற்றும் பல்வலி, முகத்தில்வலி ஆகியவற்றிர்கு காய்ந்த தரையடித் தண்டு ( சுக்கு) தண்ணீரில் இழைத்து பசையினை நெற்றியில் பற்று போட்டால் வலி குணமடையும்.

                                                                                      BEST HERBAL PRODUCTS 

 

Dry Ginger Powder (Sukku Powder)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *