மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளின் பயன்கள்

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல  மூலிகைகள் உள்ளன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

1. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.
2. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.
3. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
4. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
5. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
6. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
7. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
8. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
9. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
10. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
11. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
12. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
13. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
14. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.
15. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
16. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *