சந்தனம் வச்சுக்க மட்டுமா? அதோட மருத்துவ நன்மைகள் தெரிஞ்சா அசந்துடுவீங்க!!

Benefits :

ஓரளவு வறண்ட மண்ணிலும் விளையும் சந்தனம், மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும். ஆரம்பத்தில் தனித்து வளராத சந்தனத்திற்கு, சில துணை செடிகள் வேண்டும், அவற்றின் சத்துக்களை வேர்கள் மூலம் கிரகித்துக்கொண்டு, வளரும் தன்மையுடையவை.
சந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும்.
சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள் தான், சந்தன விதைகள் மருத்துவத்தில், பயன்படுகின்றன.
நான்கு ஆண்டுகளில் முதிர்ந்து வைரம் பாய்ந்த கட்டைகளுடன் வளரும் சந்தன மரங்களின் பக்குவத்தை, அந்த முற்றிய மரத்தில் இருந்து வரும் நறுமண வாசனையில் இருந்து அறியலாம். சந்தன மரத்தின் பட்டைகளுக்கு அடுத்தபடியாக, அவற்றின் வேரிலும் வாசனை மிகுந்திருக்கும், மாறாக, சந்தன இலைகளில் வாசனை எதுவும் இருக்காது.
வெட்டுவதற்கு ஏற்ற பருவத்தில், அவற்றின் வாசனை, எங்கும் பரவி, அவற்றின் இருப்பிடத்தை உலகிற்கு உணர்த்தும். காடுகளில் மிக அதிகம் விளைந்த சந்தன மரங்கள் இவ்வாறுதான், கொள்ளையரின் கைக்கு சென்று, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன.
இன்றும் நமது தேசமே, உலக அளவில், சந்தன ஏற்றுமதியில், முதன்மையான இடத்தில் இருக்கிறது அதுவும் மிக அதிக விகிதத்தில், உலகத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு அளவு, அதிலும் மேலாக, இந்திய சந்தனமே, உலக அளவில் தரத்தில் உயர்ந்தது என்பதும், நமக்கு பெருமை அளிக்கும் ஒரு நல்ல விசயமாகும்.
மருத்துவப் பயனாகும் சந்தனக்கட்டைகள், துவர்ப்பு சுவையுடனும், உடலுக்கு குளிர்ச்சியையும், சிறுநீரைப்பெருக்கி, , மனதிற்கு புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக காணப்படும், மனிதரின் சரும வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், ஆயின்மெண்டாகவும் தீக்காயங்களில் சேதமாகும் உடல் தோல் மற்றும் உறுப்புகளை காக்கும் சிகிச்சையில் மருந்தாகப் பயன்படுகிறது.
வைரம் பாய்ந்த சந்தன மரக்கட்டைகளில், எண்ணைவளம் மிகுதியாக இருக்கும், இதிலிருந்து எடுக்கப்படும், சந்தன எண்ணை அல்லது அத்தர், வெப்பத்தை தனித்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் மருத்துவ பயன்கள் கொண்டதும், வாசனைத்திரவியங்கள், சோப் வகைகள் மற்றும் பத்திகள் செய்யப்பயன்படுகின்றன.
பழங்காலத்தில், நல்ல விலையுயர்ந்த வைரம் பாய்ந்த சந்தன கட்டைகளை வீடுகளில் வைத்திருப்பர், அந்தக் கட்டைகளை, சந்தனக்கல் எனும் ஒரு கல்லில் நீறை ஊற்றி இழைத்து, மையாக எடுத்துக்கொண்டு, உடலில், மார்பில் ஆண்கள் தடவிக் கொள்வர், இதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம், கோடையில் உடலில் வரும் வியர்க்குரு மற்றும் வியர்வை பாதிப்புகள் விலகி, உடல் நல்ல நறுமணத்துடன். உற்சாகமாக விளங்க சந்தனம் வழிசெய்யும்.
சந்தனத்தில் பலவகைகள் இருந்தாலும், அனைத்தும் தரத்தில் ஒன்றாக காணப்படும். ஆயினும் வெள்ளைச் சந்தனம் எனும் ஒன்று தோற்றத்தில் அறிய முடியாதது, அதன் கட்டைகளை பரிசோதிப்பதன் மூலம், அறியமுடியும்.
வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சுவாமி சிலைகள் தயாரிப்பில் விஷேசமாகக் கருதப்படுகின்றன. மேலும், மனிதரின் உடல் நலத்தில் இவற்றின் பயன்பாடுகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு துணைபுரிகின்றன.
சந்தன எண்ணையின் பயன்கள் :
அரோமாதெரபி எனும் வாசனை மருத்துவத்தில், சந்தன எண்ணைகள் மனதின் அமைதிக்கும், மன அழுத்த பாதிப்புகளைப் போக்கவும், உடல் சரும வியாதிகளைப்போக்கவும், பயனாகின்றன.
உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் அதிக பலன்கள் தரும், சந்தன எண்ணை மூலம் தயாரிக்கப்படும் மேல் பூச்சு கிரீம்கள், வெயிலில் தோல் கருத்த சரும பாதிப்புகளை சரிசெய்யவும், தோலுக்கு இறுக்கத்தை அளிக்கவும் பயன்படுகின்றன.

கட்டி , வடுக்கள் மறைய :
சந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவிவர, கோடைக்கட்டிகள் வடிந்து, அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்துவிடும், மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடலை நலப்படுத்தும்.

ரத்தம் சுத்தம் செய்ய :
சுத்தம் செய்த நல்ல சந்தனத்தை, நீரில் இட்டு கரைத்து, சற்று பருக, இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக, இயங்க வைக்கும்.

சரும வியாதிகளுக்கு :
சந்தனக்கட்டைகளை, எலுமிச்சை சாற்றுடன் அரைத்து, உடலில் உண்டான, அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும், மேல் பூச்சு மருந்தாகத் தடவி வர, அவை யாவும் விரைவில் மறைந்துவிடும்.
சந்தனத்தூளை தண்ணீரில் சுடவைத்து பருகிவர, சிறுநீர் எரிச்சல் விலகிவிடும், இதுவே இரத்த மூல வியாதியையும் சரி செய்யும். சூட்டினால் உண்டாகும் கண் கட்டிகள் மறைய, சந்தன விழுதை எலுமிச்சை சாற்றில் கலந்து, இரவில் கண் கட்டிகளின் மேல் தடவி வர, சில நாட்களில் அவை மறையும்.
நீரிழிவு பாதிப்பு குணமாக, நெல்லிச்சாற்றுடன் சிறிது சந்தன விழுதை சேர்த்து தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வர, பாதிப்புகள் விலகிவிடும். வெள்ளை சந்தனத்தூளை நீரில் இட்டு மூன்றில் ஒரு பங்கு நீராக சுண்டியதும், பருகிவர, இதயப்படபடப்பு, ஜுரம், உடல் மந்தம் சரியாகி, இதயம் வலிமையாகும்.

பிற நன்மைகள் :

சந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து, சாம்பிராணி போட்டுவர, வீடுகளில், காற்று தூய்மையாகி, மனம் தெளிவுறும்.
சந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது.
சந்தன எண்ணெய், பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது.
உணவு செரிக்காமையால் ஏற்படும் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்கு நலம் பயக்கும், இல்லற வாழ்வில் நாட்டம் கொள்ள வைக்கும்.
சந்தனக்கட்டைகள் மூலம் செய்யப்படும் வாசனைமிக்க கலைவண்ணம் கொண்ட கதவுகள் பெரிய நிறுவனங்களில், வர்த்தக மையங்களில் அலங்காரத்திற்கு வைக்கப்படுகின்றன, மேலும், கலைநயம் மிக்க புகைப்பட பிரேம்கள், டேபிள் பேப்பர் வெயிட்கள் போன்ற பொருட்கள் தயாரிப்பில் சந்தனக்கட்டைகள் பயனாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *