செண்பகப் பூவை கஷாயம் செய்து சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா…!

செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும் சென்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல்  பலம் பெறும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி  வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும். மேலும் பித்த அதிகரிப்பதால் ஏற்படும் வாந்தி, மயக்கம் தலச்சுற்றல் போன்றவற்றை சரிசெய்யும்.
ஆண்மை குறைவு நீங்க செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக்  குறைவு நீங்கும்.
செண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. செண்பகப் பூக்களை அரைத்து பசையாக எடுத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக்  காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை வலி, வீக்கம், கை கால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும்  தலைவலிக்குப் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.
காய்ச்சல் குணமாக வைரஸ் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலை குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல்  குணமாகும்.
கண் பார்வை ஒளிபெற செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். ஒரு கைப்பிடி செண்பகப்பூவை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரால் கண்களைக் கழுவலாம். இந்தத் தண்ணீருடன் திரிபலா சூரணத்தைக் கலந்தும் கண்களைக் கழுவலாம். இதுபோன்ற செயல்களால் `மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் மட்டுமன்றி கண் சிவத்தல், கண்ணில் நீர்வடிதல்  சரியாகும்.
சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
பாலியல் நோய் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *