அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா?

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சுமுட்டி திணறல் ஏற்படும். வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு  பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை. அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்ற கோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள்.
ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், உணர் குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம்தான். சிலருக்கு வெயில் மற்றும் குளிரும்கூட அரிப்பை  ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும்.  குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை.  பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.
ஒவ்வொருவரும் முயன்று தமக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் எவையென்று தெரிந்து கொள்வதுடன், எவற்றால் தும்மல், அரிப்பு, வீக்கம் ஆகியவை  வருகின்றன என்று கவனித்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அலர்ஜி உள்ளவர்கள் தவிக்க வேண்டிய உணவுகள்:
அலர்ஜி பிரச்சனை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கபடும் பிரியாணி உள்ளிட்ட  உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
அலர்ஜி ஏற்படுவதை தடுக்க:
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.
பசலைக் கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளறிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *