Wellness oil bath

Benefits : 

‘‘நம்முடைய பாரம்பரியத்தின் படியும், ஆயுர்வேத மருத்துவத்தின் படியும் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று. அதுவும் நம் முன்னோர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தைக் கடைபிடித்து வந்தனர். கால மாற்றத்தின் வேகத்தில் இப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. மனித உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. அப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அவசியத்தை உணர்த்தும் பண்டிகையாகவே தீபாவளியைப் பார்க்கலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான பாலமுருகன். எண்ணெய் குளியலின் அவசியத்தையும், அதன் நன்மைகள் பற்றியும் தொடர்ந்து பேசுகிறார்.

‘‘தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கட்டாயம் எண்ணெய் தேய்க்கும் முறையை கடைபிடிப்பது முக்கியம். ஏனெனில், பண்டிகை காலங்களில் நாம் அதிக அளவு உணவுகளையும், பலகாரங்களையும் உண்போம். அதனால் நமக்கு நல்ல பசி தேவை. அதனால், அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளித்தால் நம் உடலின் தட்பவெப்பம் சீரான நிலைக்கு வருவதோடு நல்ல பசியையும் ஏற்படுத்தும். பொதுவாகவே வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கடை பிடித்தால் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதோடு மூட்டுவலி, சீரான ரத்த ஓட்டம், உடல் குளிர்ச்சி, உடல் புத்துணர்ச்சி போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

முக்கியமாக, உடலில் வாதம் சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. தெளிவான சிந்தனைக்கும் காரணமாக இருக்கிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நல்ல தூக்கத்துக்கு உதவுகிறது. காலில் வெரிக்கோஸ் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நம் சருமத்துக்கு பளபளப்பைத் தருகிறது. குடல் பிரச்னை வராமல் தடுக்கிறது’’ என்றவரிடம் எண்ணெய் குளியலுக்கென்று ஏதேனும் முறை இருக்கிறதா என்று கேட்டோம்…‘‘எண்ணெயை உச்சந்தலை முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும்.

இது அந்த உறுப்புகளின் திறனை அதிகரிக்கச் செய்வதோடு உடலின் தட்பவெப்பத்தையும் சீரான நிலையில் வைத்திருக்கும். எண்ணெய் தேய்த்த உடனே குளிக்கக் கூடாது. 15 நிமிடத்திலிருந்து 45 நிமிடத்துக்கு பிறகே குளிக்க வேண்டும். பின்பு  இளம் சூடான தண்ணீரில் குளிக்கலாம். முக்கியமாக, எண்ணெய் குளியலின்போது தலைக்கு சிகைக்காயும், உடலுக்குப் பாசிப்பருப்பு மாவும் பயன்படுத்துவது நல்லது. பாசிப்பருப்பு உடலில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, சருமத்துக்கு பளபளப்பைத் தரும். சிகைக்காய் தலையில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதோடு முடி உதிர்வு, இளம் நரையை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

அப்போதுதான் எண்ணெய் குளியலின் முழுமையான பலன் அப்படியே கிடைக்கும். அதேபோல், தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலைக்கு நல்லெண்ணெயே சிறந்தது. இதில் நல்லெண்ணெய் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கும். இது உடலில் வாதத்தை குறைத்து சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையின்படி எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம்’’ என்கிறார்.

 

 

Madhu Mallika Agarpattis 90g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *