White cold soothing to the eyes

Benefits : 

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், கண்நோய்களை போக்கவல்லதும், கைகால்களில் ஏற்படும் வலியை குணப்படுத்தும் தன்மை உடையதும், மலச்சிக்கலை தீர்க்க கூடியதும், உடல் எடையை குறைக்கவல்லதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்க கூடியதுமாக விளங்கும் வெள்ளை மந்தாரையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெள்ளை மந்தாரை. இதனுடைய இலை, பூ என அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக விளங்குகிறது. எளிதில் கிடைக்க கூடிய இது, கொழுப்பு சத்தை குறைக்கும். மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு மருந்தாகி தீர்வு தருகிறது. ரத்தத்தை கட்டுப்படுத்த கூடிய தன்மை கொண்ட வெள்ளை மந்தாரையானது இருமல், சளியை போக்குகிறது.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.
செய்முறை: பாத்திரத்தில் 5 வெள்ளை மந்தாரை பூக்கள் எடுக்கவும். இதனுடன் ஒரு டம்ளர்  நீர்விட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும். மாதவிலக்கு சமயத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். இருமல், சளியை போக்கும். நெஞ்சக சளியை வெளியேற்றும்.

மூட்டுவலி, வீக்கத்தை சரிசெய்யும் மந்தாரை இலை துவையல் செய்வது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மந்தாரை இலைகள், நல்லெண்ணெய், உளுந்தம் பருப்பு, பூண்டு, இஞ்சி, வெங்காயம், உப்பு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்க்கவும். பின்னர், வெள்ளை மந்தாரை இலைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இந்த துவயலை சாப்பிட்டுவர கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் விலகிப்போகும். உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த துவையல் உடல் எடையை குறைக்கிறது.வெள்ளை மந்தாரை பூவை பயன்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை மந்தாரை பூ, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான விளக்கெண்ணெய் எடுக்கவும். வெள்ளை மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுக்கவும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பதாலும், கண்களில் மைபோல் பூசுவதாலும் கண்களில் ஏற்படும் வலி, வீக்கம், சிவந்த தன்மை மறையும். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. கழிச்சல், சீத கழிச்சல் உள்ள எல்லா விதமான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புத மருந்தாக விளங்குகிறது. அவலை நீரிட்டு வேக வைக்க வேண்டும். இந்த நீரை வடித்து பருகிவர வயிற்றுப்போக்கு சரியாகும்.

 

 

Mattipal Flora Herbal Bathies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *