ARULMIGU ANGALA PARAMESHWARI TEMPLE ERODE

Main God:   Angla Parameshwari

Photo:

Location: 

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

சத்தி – கொமாரபாளையம் ,
சத்தியமங்கலம் – 638 401.

Festivals: 

திருக்கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

  1. அமாவாசை விசேச அபிசேகம், அன்னதானம்
  2. மூலமந்திர ஜபஹோமம் : பிரதி மாதம் ஒரு ஞாயிறு
  3. கோபூஜை காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
  4. அர்ச்சனை வைப்பு திட்டம் : நீங்கள் குறிப்பிடும் நல்ல நாளில் அன்னையின் முன் உங்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு
    குங்கும பிரசாதம் அனுப்பப்படும்.
  5. மார்கழி கட்டளை : தினசரி அபிசேகம்
  6. பிரதோஷ வழிபாடு : நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு அபிசேகம்.
  7. பௌர்ணமி பூஜை (மாலை நேரம்)

Photo: Natchatra devadas

வருடாந்திரப் பூஜைகள்

  1. மஹா சிவராத்திரி உற்சவம் : மாசி மாதம் அர்த்த ஜாம பூஜை, அபிசேகம்.
  2. சித்ரா பௌர்ணமி (ஏப்ரல் – மே) : மாலை 5.00 மணிக்கு 108 பால்குட அபிசேகம், அங்காள பரமேஸ்வரி அஷ்டோத்ரம், அங்காள பரமேஸ்வரி சகஸ்ரநாம பூஜை.
  3. வாணியர் குல வைகாசி திருவிழா (மே)
  4. ஆடி மாதம்(ஜூலை)
    • செங்குந்த முதலியார் வம்ச வழிபாடு
    • பட்டலியர் குல வம்ச வழிபாடு
    • பீமன்குல வம்ச வழிபாடு
    • ஊமத்தூரர் வம்ச வழிபாடு
    • பட்டி குலத்தார் வம்ச வழிபாடு
  5. புரட்டாசி மாத வழிபாடு(செப்டம்பர் – அக்டோபர்) : ஆர்ய வைசியா சமூகத்தினர்சிறப்பு யாகம், ஆறாட்டு

Photo:

Workship timing:

காலை : 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
மாலை : 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

அபிஷேகம் செய்பவர்கள் காலை 9 மணி வரை பதிவு செய்து அன்றைய தினம் அபிஷேகம் செய்து கொள்ளலாம்.

Photo: Alankar utsavars on Chitrapowrnami day

Histroy:

ஆதி சக்தியான பிரம்மாண்ட நாயகி, சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் அங்காள பரமேஸ்வரியாக அருள்பாலித்து கருணைத் தாயாக வீற்றிருக்கின்றாள். இதற்காக அவ்விடத்தை அன்னையே தேர்ந்தெடுத்து கோவில் கொண்டு வீற்றிருக்கின்றாள் என்பது மிகவும் அதிசயமான அற்புதமான அருள் வரலாறு ஆகும்.

சுமார் 600 வருடங்களுக்கு முன்னால் நான்கு அன்பர்கள், மைசூரில் அங்காள பரமேஸ்வரியின் ஆழ்ந்த பக்தர்களாக இருந்தனர். கேட்பவர்களுக்கெல்லாம் கேட்கும் வரம் தரும் இந்த அன்னைக்கு நாமே ஓர் ஆலயம் கட்டலாமே என்று அன்னையின் அருளால் தீர்மானித்தனர். அதற்காக மூல சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை அழைத்து வர வேண்டும். அவளின் சக்தி அம்சமாக விளங்கும் புற்றிலிருந்து மண் எடுத்து வந்து, அதோடு மேல் மலையனூரிலேயே சிலையை வடித்துத் கொண்டு வந்து அந்த மூல ஆற்றலோடு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்கள்.

அதற்குக் காரணம் மேல் மலையனூரின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, மூல சக்தி என்பது மட்டுமல்ல, 54 சக்தி பீடங்களில் தாட்சாயிணியின் வலது பாகம் வீழ்ந்த இடத்தில் குடி கொண்டவளே மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி. அதனால் தான் அவள் சக்தியை அவள் அருளோடு கொண்டு வரத் திட்டமிட்டனர்.

அதன்படியே மேல்மலையனூர் சென்று ஓர் அங்காளி சிலையை வடித்து, அதோடு புற்று மண் எடுத்துக் கொண்டு, மைசூர் நோக்கி புறப்பட்டார்கள். அதன் பின்னர் தான் அம்மனின் திருவிளையாடல் ஆரம்பமானது. என்னை அழைத்துச் செல்லத்தான் உங்களால் முடியுமே தவிர, அமரும் இடத்தை நீங்கள் அறிய முடியுமா என சிரித்துக் கொண்டாள்.

Photo: Nachatra,Thithi,Navagraha homam Ganapathi

அந்த நான்கு மைசூர் அன்பர்களும் அம்பிகையின் திருவுள்ளம் அறியாமலே ஆழ்ந்த பக்தியோடு சிலையையும், புற்று மண்ணையும் சுமந்து கொண்டு மைசூர் நோக்கி சென்றார்கள்.

வழியிலேயே இறை சக்திகள் சூழ்ந்திருக்கும் சத்தியமங்கலம் எனும் ஊரில் கொமாரபாளையம் என்ற இடத்தில் பவானி நதிக்கரையில் சந்தியா வந்தனம் செய்ய எண்ணினர்.

பவானி நதி, அம்மனின் வருகையை அறிந்து ஆனந்தமாக கல கலத்து நகைத்து இன்பப் பெருக்கெடுத்து ஓடினாள்.

அன்னையின் எண்ணம் அறியாத அவர்கள், அம்பிகையின் சிலையை கீழே வைத்து விட்டு, நீராடி தங்கள் கடன்களை முடித்தார்கள்.

பிறகு மீண்டும் பயணம் செய்ய அம்பிகையின் சிலையை எடுத்தார்கள்.அப்போது தான் அம்பிகையின் அற்புத திருவிளையாடல் அங்கு நடந்தது. அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை. நால்வரும் சேர்ந்து எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் சிலை சிறிதும் கூட அசையவில்லை. எத்தனையோ முயற்சித்தும் எடுக்க முடியாமல் போனது,

அப்பொழுது தான் அவர்களுக்குப் புரிந்தது. அம்பிகை தான் அமர்ந்து அருள் பாலிக்க வேண்டிய இடத்தை, அவளே தேர்ந்தெடுத்து, நிச்சயித்துக் கொண்டால் என்பது.

Photo: Nagaabranam

அது யாரும் இல்லாத அநாதரவான இடம். சுற்றிலும் வெட்டவெளி, கொஞ்சம் இடம் தள்ளி வயல வரப்புகள், வானமே கூரை, வையகமே மாளிகை என்று அம்மை நினைத்தாளோ.

அந்த நால்வருக்கும் கண்ணீர் பெருகியது. உள்ளம் கசிந்து உருகியது. அம்மா! இது என்ன வேடிக்கை? நீ படைத்த கோளங்கள், கோலங்களாய் விரிந்திருக்க கோரைப் புற்கள் முளைத்த இடத்திலே கோவில் கொள்ள நினைத்தாயே – எனப் பரவசம் அடைந்தார்கள்.

அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நான்கு அருள் அன்பர்களும் மனமுருகி அசைக்க முடியாத சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஓர் சிறிய ஆலயம் கட்டினார்கள். இப்படிப்பட்ட திருவிளையாடலோடு அங்கே ஆட்சி புரிய வந்தவள் தான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி.

Photo: Thampathi pooja homam

தானே அங்கே விரும்பி அமர்ந்ததனால் மிக மிக சாந்த சொரூபிணியாக காட்சி தருகிறார்கள். அருளாட்சி புரிகின்றாள். இவள் மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குலதெய்வங்களாகக் கோலோச்சி விளங்குகிறாள். சிம்ம வாகனத்தை விட்டு நந்தியை வாகனமாகக் கொண்டு வந்த சாந்த சொரூபிநியாக இருக்கிறாள்.

அம்பிகையின் அருட்கதைகள் எண்ணற்றது. அவளின் அன்பைப் புரிந்து கொண்டவர்கள், அவளால் வரம் பெற்று வளம் நிறைந்தோர்கள், என அவளின் பக்தர்கள் ஒன்று கூடினார்கள், ஒருங்கிணைந்தார்கள். அன்னையை வணங்கி அமுதுண்டார்கள்.

சாந்த சொரூபிணியான, நம் அன்னையின் ஆலயத்தில் இனி ஒரு போதும் உயிர் பலிகள் தரக் கூடாது, என எண்ணம் கொண்டு சாத்வீக பூஜைகளும், ஆராதனைகளும் செய்து அம்பிகையின் அருளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு இந்த அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காணும் மிக அற்புதமான ஒன்றாகும்.

மைசூர் அருளாளர்களின் சிறிய ஆலயப் பணிக்குப் பின் சுமார் 600 வருடங்கள் கழித்து, மற்றும் ஒரு மாபெரும் திருவிளையாடலை அம்பிகை நடத்தினாள். மீண்டும் தன்னுடைய இடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்திட அழகான ஆலயம் அமைத்துக் கொள்ள தீர்மானித்தாள். அவளது எண்ணப்படியும், அருளின் ஆற்றலாலும், அன்னையின் அருள் பெற்ற அன்பர்களின் ஆசையாலும் அற்புதமான ஆலயம் எழுந்தது. 19.01.2000ல் அம்பிகை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, திருக்குட நன்நீராடினாள். தீமைகளைத் தீய்க்கும் திரு அவதாரம் கொண்டாள்.

இந்த ஆலயத்தின் அழகு சிலிர்ப்போடு சிந்தையில் நிறையக் கூடியதும், சிற்றறிவைக் களையக் கூடியதாகும்.

94 சக்திகளோடு சக்தியாய் எழுந்துள்ளது கம்பீரமான இராஜகோபுரம். இராஜகோபுரம் கடந்தால் வசந்த மண்டபத்தின் முன்பாகவே கருப்பராயரும் பெச்சியம்மனும் அடி உயரமாக துஷ்ட சம்கார ரூபர்களாக விஸ்வரூபமாய் அமர்ந்திருக்கின்றனர். வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பு கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி அருகில் செந்திலாண்டவர் ஆலயம், மகா மண்டபத்தில் தச விதத் தூண்கள், அதில் அஷ்டலக்ஷ்மி ரூபங்கள் என ஆலய அழகும் இறையாற்றலும் பார்க்கும் கண்களையும் மனைகளையும் பரவசப்படுத்தும். அந்த ஆனந்தத்தோடு கர்ப கிரகம் பார்த்தால் இரண்டு நிலை கோபுர வாசினியாக, சாந்த சொரூபிணியாகத் திருவிளையாடலரசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் அழகுத் திருக்கோலம் பார்த்தவுடன் நம் நெஞ்சமெல்லாம் நிறைகின்றது.

புன்னகையின் அழகினிலே ஒளிர்ந்து ஒளிர்கின்றாய் – அம்மா, அழகெல்லாம் நீயெனவே புன்னகைக்கின்றாய். அந்தப் புன்னகையின் அர்த்தமும், அம்பிகையின் அளவற்ற அருளும், எண்ணற்ற திருவிளையாடல்களும், ஆசியும் சத்தியமங்கலத்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை தரிசித்தவர்களுக்கு கிடைத்த தவயோக சூட்சுமம் ஆகும்.

அன்னையின் அற்புத ஆலயத்தைச் சிந்தையில் நிறுத்துவோம், சிறுமைகள் களைந்து பெருமைகள் பெருக்குவோம், வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழ அன்னையிடம் அடிபணிவோம்.

அங்காள பரமேஸ்வரியின் தோற்றம்

ஆதியுகத்தில பிரம்மதேவன் 5தலைகளுடன் இருந்தார். ஓரு சமயம் மகாவிக்ஷ்ணுவிடம் காக்கும்தொழிலை விட படைக்கும் தொழில்புரியம் தாமே முழுமுதற் பொருளாவோம் ௭ன பிரம்மாவின் 5வது தலை ஆணவம் பேசியது. அந்த ஆணவத்தை ௮டக்க விக்ஷ்ணு சிவபிரானை கேட்டுக் கொண்டார். சிவபிரான் விண்ணும் மண்ணும் நிறைந்து நடுவுற தோன்றி ௭மது ௮டியும் முடியும் முதலில்காண்பவரே ௨யர்ந்தவர் ௭ன்று ௮சரீரியாக ௨ரைத்தார். திருமால் ௮டிகாண இயலேன் ௭ன்றார். பிரம்மனனின் 5வது தலை தாம் முடியைக் கண்டோம் ௭ன்று ௨ரக்க கூறிச் சிரி்த்தது.

காலபைரவர் தோன்றி ஆணவம், பொய் பேசியதாற்காக பிரம்மாவின் 5வது தலையை கைவிரல்நகங்களால் திருகி கொய்தார். மகாவிக்ஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் பைரவர் கையி்ல் பிரம்மகபாலத்தை ஓட்டிக்கொண்டார்.

கந்தபுராணம், தேவாரம் இதை பதிவு செய்துள்ளன.

அந்த பிரம்மகபாலத்திற்கு விடுதலை ௮ளிக்க பார்வதிதேவி ௮ண்ணன் மகாவிக்ஷ்ணுவிடம் ஆலோசனை கேட்டார். ௮ண்ணன் ஆலோசனைபடி பார்வதிதேவி ௮ன்னபூர்ணேஸ்வரியாக மாறி பிரம்மகபாலத்திற்கு சுவையான உணவு ௮ளித்தாள். ஓரு முறை பிரம்மகபாலத்தின் வாயில் விழாமால் பூமியில் உணவு விழுந்தது. உணவின் சுவையால் ஈர்க்கபட்ட பிரம்மகபாலம் உணவை ௨ண்ண பைரவரின் கையிலிருந்து பூமிக்கு சென்றது. ௨டனே ௮ன்னபூர்ணேஸ்வரி அங்காள பரமேஸ்வரியாக மாறி பிரம்மகபாலத்தை பூமிக்குள் ௮ழுத்தி ஆட்கொண்டார்.

அங்காள பரமேஸ்வரியிடம் பிரம்மகபாலம் கிழ்கண்டவாறு வேண்டியது:

௮ன்னபூர்ணேஸ்வரியாக இருந்து சுவையான உணவு அளித்த தாயே, ௭னக்கு ௮ருள்புரி ௭ன வேண்டியது. கருணையே வடிவுன அங்காள பரமேஸ்வரி பிரம்மகபாலத்தை தனது இடது கையி்ல் தாங்கினர். மேலும் பாவாடைராயனாக மாற்றி, தன்னுடைய பரிவார தேவதையாக வைத்து கொண்டாள். மேலும் தனக்கு வரும் உணவை பாவாடைராயனுக்கு ௮ளிப்பதாக கருணையுடன் கூறினாள். ஆகையால் தான் விழா காலங்களில் பாவாடைராயனுக்காக படையல்சாதம் படைக்கபடுக்கிறது.

அங்காள பரமேஸ்வரியின் கருணை செயலை கண்டு மகிழ்ந்த சிவபிரான் அங்காள பரமேஸ்வரிக்கு சிவலிங்கம் பரிசு அளித்தார். இந்தசிவலிங்கம் மூலம் நான் உன்னுடன் ௭ப்போதும் இருக்கிறேன் ௭ன்று கூறினர். ௮ம்மை சிவலிங்கத்தை நெற்றிவகிடில் வைத்துக்கொண்டார். (ஞான-கிரியா வடிவமாகிய சித் சக்தி).

இன்றும் தஞ்சை மாவட்ட கோவில்களில் ௨ள்ள (பழைமையான) ஆலையங்களில் அங்காள பரமேஸ்வரியின் நெற்றியில் சிவலிங்கத்துடன் காணலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *