ARULMIGU ARUNACHALEESWARAR TEMPLE THIRUVANNAMALAI

Maingod: Arunachaleeswarar

Location: 

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,

திருவண்ணாமலை-606601.

Festivals:

1. சித்திரை சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள்.

2. வைகாசி வைகாசி விசாகம் 1 நாள்.
3. ஆனி ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள்.
ஆனி திருமஞ்சனம் (ஸ்ரீ நடராஜர் உற்சவம்) 1 நாள்.
4. ஆடி ஆடிப்பூர பிரம்மோற்சவம் 10 நாட்கள்.
சுந்தரர் உற்சவம் 1 நாள்
5. ஆவணி ஆவணி மூலம் உற்சவம் 1 நாள்.
6. புரட்டாசி நவராத்திரி உற்சவம் 9 நாட்கள்.
7. ஐப்பசி அன்னாபிஷேகம் 1 நாள்
கந்தர் சஷ்டி உற்சவம் 6 நாட்கள்.
8. கார்த்திகை கார்த்திகை தீப பெருவிழா 17 நாட்கள்.
9. மார்கழி வைகுண்ட ஏகாதசி 1 நாள்.
ஆருத்ரா தரிசன உற்சவம் 1 நாள்.
10. தை உத்ராயண புண்யகாலம் உற்சவம் 10 நாட்கள்.
திருவூடல் உற்சவம் 1 நாள்.
மணலூர்பேட்டை தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்.
கலசபாக்கம் ரதசப்தமி தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்.
தீர்த்தவாரி உற்சவம் 1 நாள்
11. மாசி மகா சிவராத்திரி 1 நாள்.
மாசி மகம் உற்சவம் 1 நாள்.(பள்ளி கொண்டாப்பட்டு தீர்த்தவாரி).
12. பங்குனி பங்குனி உத்திர உற்சவம் 6 நாட்கள்.

இத்திருக்கோயிலில் ஆறுகால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்றும் சிவாலயங்களில் நடத்தப்படவேண்டிய அனைத்து வார, மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது

.Workship timing:

நேரம்
பூஜைகள்
5.30 A.M
உஷக் கால பூஜை
8.00 A.M
காலசந்தி பூஜை
11.30 A.M
உச்சிக்கால பூஜை
5.30 P.M
சாயரட்சை பூஜை
7.30 P.M
இரண்டாம் கால பூஜை
9.00 P.M
அர்த்தஜாம பூஜை

kumbabishekam6.2 (29)

இதைத்தவிர பஞ்சபருவ பூஜைகளான அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி, சுக்ரவாரம் மற்றும் சோமவாரம் பூஜைகளும் நடத்தப்படுகின்றன

History: 

லிங்கோத்பவர்

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு துèரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு அருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்..

kumbabishekam6.2 (41)

திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்.

arunachaleshwarar

இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது. ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருக்கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்.

 

திருவண்ணாமலை – அண்ணாமலையண்ணல்உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன்.அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.

நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை(20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

திருமுறைத்தலம்

திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.

16Tiruvoodal-Urchavam--2016

பஞ்ச பூதத் தலம்

இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் ‘தீ’ என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.

6th night amman

ஆதாரத்தலம்

ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.

ஞானிகளும் துறவிகளும்

இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச்சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.

மகான் சேஷாத்திரி சுவாமிகள்

அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமசிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலான ஞானத்தபோதனர்களை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.

மலை வலத்தின் சிறப்பு(சுற்றிவருதல்)

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணன் என்றால் சூரியன் – நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2688 அடி.

அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

arunachaleswarar vasanthotsava_16 (3)

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.

63nayan2014 (2)

மலை வலம் வரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் ரூ. 12 லட்சம் செலவில் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களால் மலைசுற்றி வரும் 14 கிலோமீட்டர் பாதை முழுவதற்கும் சோடியம் ஆவி விளக்குகள் புதிதாக பொருத்திதரப்பட்டுள்ளது. இது இரவில் மலைவலம் வரும் பத்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மலை வலம் வரும் வழியில் ஆங்காங்கே நகர நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் குழாய் பம்ப் போடப்பட்டு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலனுக்காக குறிப்பிட்ட காலத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில் ஆங்காங்கே அன்னதானமும் மற்றும் ஒரு சில மெய் அன்பர்களால் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

arunachaleshwarar

மலைவலப் பாதையிள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

 

Stone Craft Shiva & Shakti

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *