Main God: Arulmigu masaniamman
Location:
Arulmigu Masani Amman Temple
Pollachi Taluk, Coimbatore District, Anaimalai, Tamil Nadu 642104
Festivals:
அருள்மிகு மாசாணி அம்மன் – திருவிழாக்கள்
தை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா போல வெகுவிமரிசையாகக் கோவிலில் கொண்டாடப்படுகிறது(ஜனவரி-பிப்ரவரி,மேலும் அமாவாசை நாட்களில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
வருடாந்திர விழா (குண்டம் திருவிழா) :
இத்திருக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் குண்டம் (பூமிதி) திருவிழாவாகும். பொதுவாக குண்டம் திருவிழா கொங்கு நாட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்று. இக்குண்டம் திருவிழா தைத்திங்கள் அமாவாசை அன்று திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடி ஏற்றிய 14-ம் நாள் இரவு ஊர்வலமாக மயானக்கரைக்குச் சென்று மயான மண்ணினால் அம்மனின் உருவச்சிலை செய்து அதற்கு சக்தி பூஜை செய்யப்படுகிறது. 15-ம் நாள் கங்கனம் கட்டிய பின் திருக்கோயில் கும்பஸ்தானம் நடைபெறும்.
மயான பூஜையில் குண்டத்தில் இறங்கும் ஆண்களும், கும்பம் எடுத்துக்கொள்ளும் பெண்களும் மிகுந்த பக்தியுடன் கலந்து கொள்கிறார்கள். 16-ம் நாள் சித்திரை தேர் வடம் பிடித்து, நகரை வலம் வந்த பின் அன்று இரவு அக்னிகுண்டம் வளார்க்கப்பட்டு 17-ம் நாள் காலையில் பக்தார்கள் (ஆண்கள் மட்டும்) குண்டத்தில் இறங்குவார்கள். 18-ம் நாள் அம்மனுக்கு திருமஞ்சள நீராட்டு விழா நடைபெற்றபின் அன்றிரவு மகாமுனியப்பன் பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.
இக்குண்டம் திருவிழா கோவை மாவட்டத்தில் புகழ்மிக்க பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் சிறந்த பெருந்திருவிழாவாக விளங்குகிறது.
திருக்கோயில் பஞ்சாங்கம் :
வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ்வருடப்பிறப்பு, மாதாந்திர அமாவாசை, விநாயகா; சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் மாதபூஜை, நவராத்திரி விழா ஆகிய நாட்களில் விசேச தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Workship timing:
அருள்மிகு மாசாணி அம்மன் – பூஜை காலங்கள்
அமாவாசை அன்று இறைவழிபாடு காலை 5.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மாலை 8.00 மணி வரை நடைபெறும்,இந்த வழிபாட்டுக்கு கோயம்புத்தூர் மாவட்டதில் இருந்து மட்டுமல்லாமல் மற்றும் மற்ற மாவட்டங்களில் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்ய கோவிலில் கூடுகிறார்கள்.
பூஜைகள் | நேரம் |
---|---|
சன்னதி திறப்பு | 6.00 மணி |
அபிஷேக பூஜை அலங்காரம் | 6.30 மணி |
உச்சிகால பூஜை | 11.30 மணி முதல் 12.30 வரை |
அபிஷேக பூஜை | 4.00 மணி முதல் 4.30 வரை |
சாயரட்சை பூஜை | மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை |
சன்னதி திருக்காப்பு | 8.00 மணி |

HISTORY:
தலவரலாறு
இத்திருக்கோயில் கொங்கு நாட்டின் தென்பகுதியில் சங்க காலந்தொட்டு சிறந்து விளங்கும் ஆனைமலை கிராமத்தில் ஆழியாற்றின் கிளை நதியாக உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியை நன்னன் என்னும் ஓரு குறுநில அரசன் ஆண்டு வந்த போது, ஆற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிட்டிருந்தான.
இந்நிலையில் ஒருநாள் ஆழியாற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த ஒரு இளம்பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை சாப்பிட்டதனை தெரிந்த நன்னன் கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டதால், அவளது தந்தை தனது மகனின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண்யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் இழைப்பதாக கூறியும் ஏற்காமல் அப்பெண்னை கொலை செய்ய உத்திரவிட்டான். கொலையுண்ட அந்தப் பெண்னை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்தப் பெண் போன்ற ஒரு உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபட்டார்கள். மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்தபெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டாள். பெயர் தெரியாத அந்த ஆனைமலைப் பெண் பின்னர் கொங்கு நாடு முழவதும் வழிபடும் பெண்தெய்வமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து இந்த மயான தேவதையை வழிபடுவது வழக்கமாயிற்று.
மாசாணியம்மன் – பெண்ணின் தனித்தெய்வம்.
இப்பெண் தெய்வம் பெண்களின் காவல் தெய்வமாகவும்,பெண்களின் தீராத வயிற்றுவலி,மாதாந்திர துன்பங்கள் நீங்க உதிர மாலை வாங்கி சார்த்தி நோய் நிவர்த்தியாக பச்சிலை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை சாப்பிட்ட பெண்கள் பலனடைந்து அம்மனின் மற்றொரு சிறப்புகளில் ஒன்றாகும்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அம்பிகையின் திருமுன் வந்து குறிப்பிட்ட வாரங்களுக்கு வேண்டிய குழந்தை செல்வம் பெற்று, தாயும் சேயுமாக வந்து வழிபாட்டை நிறைவேற்றி செல்வது வழக்கமாக உள்ளது.
அருள்மிகு மாசாணியம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டு பிரசாதமாக வழங்கப்படும் கருப்புக்கயிற்றினை கையில் கட்டிக்கொண்டால் எவ்வித தீவினையும் வராமல் துன்பம் தீர்ந்து போகும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு அதிகம் உண்டு. அம்பிகையின் திருவுருவத்திற்கு நாலரை மீட்டர் நீளத்தில் புடவை சாத்துவதும், எலுமிச்சம்பழம் மாலை அணிவதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
visit.pooja.com/info