Main God :
Arul migu Nachiyar Andal
Location :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் – 626 125
தமிழ்நாடு
Festivals :
ஸ்ரீவில்லிப்புத்தூர் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கோலம் கொண்டிருக்கின்றது.
சித்திரை
9 நாட்களுக்கு சித்ரோத்ஸவம் நடைபெறுகிறது. சித்திரா பௌர்ணமித் திருநாளன்று ஆண்டாள் ரெங்கமன்னாரின் தேர் பவனி நடைபெறுகிறது.
வைகாசி
வசந்த உத்ஸவம் (கோதா ஸ்துதி)- நம்மாழ்வார் உத்ஸவம் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஆனி
10 நாட்களுக்கு பெரியாழ்வார் உற்சவம் நடைபெறுகிறது. பௌர்ணமி தினங்களில் ஆண்டாளுக்கு முப்பழம் ந்டைபெறும்.
ஆடி
ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.
முதல் நாள்
த்வஜ ரோஹனம், இரவில் பதினாறு வண்டி சப்பரம் நடைபெறுகிறது.
ஐந்தாம் நாள்
காலையில் – பெரியாழ்வார் மங்கலா சாசனம் நடைபெறுகிறது.
இரவில் – கருட சேவை நடைபெறுகிறது
ஏழாம் நாள்
கிருஷ்ணர் கோயிலில் சயன சேவை நடை பெறும்.
ஒன்பதாம் நாள்
தேர்த் திருவிழா நடை பெறும்.
பத்தாம் நாள்
முத்துக்குறி நடைபெறுகிறது.
ஆவணி
பெரியாழ்வார் திருபவித்ர உற்சவம் 7 நாட்களுக்கு நடைபெறுகிறது.
புரட்டாசி
பெரிய பெருமாள் பிரம்மோத்ஸவம் 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கருட சேவை நடைபெறுகிறது.
ஐப்பசி
தீபாவளிப் பண்டிகை
ஆண்டாள் ரெங்கமன்னாரின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
பெரியபெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
கார்த்திகை
கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை வைக்கப்படும்.
திருமங்கையாழ்வார் உற்சவம் நடைபெறுகிறது. கொசிக ஏகாதசியன்று 108 வஸ்திர சேவை நடைபெறுகிறது.
மார்கழி
திரு அடியாயன உற்சவம்
பகல் பத்து
முதல் நாள்- பச்சை பரத்தல்
திருப்பல்லாண்டு தொடக்கம்
பத்தாம் நாள் – அமிர்த மதனம்
தினமும் அரயர் சேவை நடைபெறுகிறது.
இராப்பத்து உற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் – வைகுண்ட ஏகாதசி
பரமபத வாயில் திறக்கப்படும்.
பத்தாம் நாள் – நம்மாழ்வார் மோக்ஷம்
மார்கழி நீராட்டல் உற்சவம் 8 தினங்கள் நடைபெறுகிறது.
பிரியா விடை
தினமும் எண்ணெய் காப்பு, திருமஞ்சனம் நடைபெறுகிறது.
தை
மணவாள் முனிகளுக்கு மங்கலா சாசனம் நடைபெறுகிறது.
மாசி
மாசிமகத்திலிருந்து மூன்று நாட்களுக்கு தெப்போத்ஸவம் நடைபெறுகிறது.
பங்குனி
ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண பிரம்மோத்ஸவம் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
Workship Timing :
காலை 6.30 மணிக்கு- விஷ்வரூப தரிசனம்
காலை 8.30 மணிக்கு- கால சாந்தி பூஜை
நற்பகல் 12 மணிக்கு- உச்சிகால பூஜை
பிற்பகல் 1 மணிக்கு- நடை திருக்காப்பிடுதல்
மாலை 4 மணிக்கு- நடை திறப்பு
மாலை 6 மணிக்கு- சாயரக்ஷை
இரவு 8 மணிக்கு- அத்தாளம்
இரவு 9 மணிக்கு- அரவணை
History :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் இரண்டு பாகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் வடபத்ர சாயனார் திருக்கோயிலும், மறு பகுதியில் ஆண்டாள் சன்னதியும் அமைத்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்கள் இங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்தே இக்கோயில் அதற்கும் முற்பட்டதென அறிய முடிகிறது.
இப்புனித தலத்தை ஆட்சி செய்த வில்லி என்னும் மன்னனால் வடபத்ர சாயனார் திருக்கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கிபி.765-815ல் குருபரம்பரை மரபின்படி வல்லபதேவன் என்னும் பாண்டிய மன்னனின் உதவியோடு பெரியாழ்வார் இத்திருக்கோயிலின் உயர்ந்த கோபுரத்தை கட்டமைத்தார்.
அதேபோன்று, பல்வேறு பாண்டிய மன்னர்களால், பல்வேறு காலங்களில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கட்டமைக்கப்பட்டுள்ளது. பாண்டியரின் அரச சின்னமான மீன் சின்னத்தை மேற்கூறையில் இன்றும் காணமுடிகிறது. மன்னர் திருமலை நாயக்கர் இத்திருக்கோயிலில் பல புணரமைப்புப் பணிகளைச் செய்துள்ளார். திருமலை நாயக்கர், அவரது சகோதரன் சொக்கப்ப நாயக்கர் மற்றும் அவர்களது மனைவிகளின் உருவங்களைக் கொண்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலின் ராஜ கோபுரம் தமிழகத்தின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும் அமைந்து சிறப்புற்றுள்ளது. இக்கோபுரம் பதினொன்று அடுக்குகளைக் கொண்டு வானளாவி நிற்கின்றது. கவியரசர் கம்பர் தனது பாடல்களில் இக்கோபுரத்தின் சிறப்புகளை அழகாக வருணித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாறு
பகவான் வராக (பன்றி) அவதாரம் எடுத்து இங்கு அமர்ந்ததால், இத்தலம் ‘வராகக்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. வேடுவ இனத்தைச் சேர்ந்த வில்லி, கண்டன் என்னும் இரு சகோதரர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.
ஒருமுறை இருவரும் வேட்டைக்குச் சென்றிருந்தனர். சிறிய சகோதரனான கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டான். தம்பி இறந்து போனது தெரியாமல் வில்லி அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தான். ஆனால், கண்டறிய முடியவில்லை. கலைத்துப்போன வில்லி, தன்னை மறந்து உறங்கிவிட்டான். பகவான், வில்லியின் கனவில் தோன்றி, கண்டனுக்கு ஏற்பட்ட துர்விதியைக் கூறினார். மேலும், காலநேமி என்னும் அசுரனை அழிக்கத் தான் அவதாரம் எடுப்பது பற்றியும் கூறினார். இவ்வாறு கூறிய இறைவன், அங்கிருந்த ஆலமத்தின் அடியில், வடபத்ர விமானத்தில் பள்ளிகொண்டார்.
மேலும் வில்லிக்கு வழிகாட்டி தனக்கு ஒரு ஆலயமும் கட்டச் செய்தார். இறைவனின் அருளால் வில்லி ஒரு நகரம் அமைத்தான். இந்நகரம் மணல் மேடாக அமைந்து, வில்லிபுத்தூர் என்றும், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தலமானதால் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படுகின்றது.