OM SRI BHAVANI AMMAN TEMPLE

Main god : Om Sri Bhavani Amman

Location : 

ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெரியப்பாளையம்,

     திருவள்ளூர் மாவட்டம்
     தமிழ்நாடு.
     இந்தியா

Temple Statue

Festivals : 

சித்திரை

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம். உற்சவர் பவானி அம்மன் ஆரணி ஆற்றங்கரையில் எழுந்தருளச்செய்து சிறப்பு அபிஷேகம். சிறப்பு அலங்காரம், மேள தாள வாத்தியங்களுடன் திருவீதி உலா.

கத்தரி பூஜை முன்னிட்டு பானகம் நிவேதனம் செய்யப்படும்.

Trident(Soolam in Temple)

ஆடி

ஆடி பிரம்மோற்சவம் முன்னிட்டு ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று பந்தகால் நடைபெறும். ஆடி முதல் வார சனிக்கிழமை அன்று அற்புத சக்தி விநாயகருக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மேள தாள வாத்யிங்களுடன் திருவீதி உலா. ஆடிமாதம் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 14 வாரம் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஜோதி தரிசனம். ஸ்ரீ பவானி உற்சவர் அம்மன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பிரகார புறப்பாடு.மாலை சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா.

ஆடிப்பூரம் முன்னிட்டு சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைப்பெறும்.

ஆவணி

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அற்புத சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஓமங்கள், அலங்காரம்,திருவீதி உலா நடைபெறும்.

Child Cradle Offerings

புரட்டாசி

ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு நடைபெறும்.

நவராத்திரி முன்னிட்டு கொலு அலங்காரம் செய்யப்பட்டு, 9 நாட்களுக்கும் மாலை ஸ்ரீ பவானி உற்சவர் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஓமங்கள் நடைபெறும். 10 ம் நாள் விஜயதசமி முன்னிட்டு பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.

ஐப்பசி

நாக சதுர்த்தி முன்னிட்டு புற்றுக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

கார்த்திகை

திருக்கார்த்திகை தீபம் முன்னிட்டு மகா தீபம் சொக்கப்பனை ஏற்றப்படும்.

Neem Saree Offerings

மார்கழி

மார்கழி மாதம் தனூர் மாத பூஜை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அனுமன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். வடைமாலை சாற்றப்படும்.

தை

தைப்பொங்கல் முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாட்டுப்பொங்கல் முன்னிட்டு திருக்கோயில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை நடைபெறும்.

Pongal Prayer Offerings

தைபூசம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெறும். மாலை உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், மேள தாள வாத்தியங்களுடன் திருவீதி உலா நடைபெறும்.

பௌர்ணமி உற்சவம்

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ னிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

மாதாந்தி பௌர்ணமி முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை மரத்தேர் பவனி நடைபெறும்.

Temple Top View

கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சந்தனகாப்பு நடைபெறும்.

சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ அற்புத சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

Offerings

Workship timing : 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை

காலை : 5:30 மணி – 12:30 மணி
மதியம் : 2:00 மணி – 9:00 மணி
ஞாயிறு
முழு நாள் : 5:00 மணி – 9:00 மணி
History :யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்திரசேனனுக்கு குமாரனாகத் தோன்றிய காலநேமி என்ற அரசகுல கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும் தேவகியையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேரை தானே செலுத்தி சென்றான் .அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் சக்தியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது.

Temple Wall

இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான்.அதைக் கண்டு வாசுதேவர் கம்சனை தடுக்க கம்சன் மறுத்து தேவகியை கொன்றேத் தீருவேன் என்று நின்றபோது வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன் கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார்.ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல் வாசுதேவரையும்,தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான் .சிறைக்குள் தேவகி பெற்றெடுத்த ஒவ்வொரு சிசுவையும் வாசுதேவர் தன் சொல் காக்கும் நிலையில் கம்சன் முன் கொண்டு வந்து வைப்பார்.கம்சன் அந்த சிசுக்களை துன்புறுத்தி அழித்தான்.எட்டாவது கருவை கம்சன் எதிர்பார்த்திருந்த பொழுது கண்ணன் பிறந்தான்.அந்தக்கண்ணனே நந்தகோபன் மனைக்குமாறி நந்தகோபால் மனையிலிருந்த மாயாதேவியை தேவகியிடம் சிசுவாக விடப்பட்டார் முன்னர் வசுமதியென்றும்,தாரா என்றும் இருந்தவள்.அஸ்தியின் தேவியாகத் தோன்றிய இரப்பி அரசனது மந்திரியின் குமாரியாக விளங்கி நந்தகோபனை மணந்த யசோதை மாயையைப் பெண் மகளாகப் பெற்றெடுக்க,தேவகி கண்ணனைப் பெற்றெடுத்தாள்.

பிறந்த கண்ணன் தமது பஞ்சாயுதத்துடன் வாசுதேவருக்கும்,வேதகிக்கும் காட்சி தந்து,அவ்விருவரின் முற்பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறித் தன்னை துஷ்டநிக்ரகம் செய்து நிஷ்ட பரிபாலனம் செய்ய நந்தகோபர் மனைவியான யசோதையிடம் கொண்டுபோய் விட்டு ,அங்குள்ள அதர்மத்தை ஒழிக்க,அகில உலகில் குமரியாக வடிவெடுத்து வந்துள்ளவரும் விஷ்ணுவின் நாபிக்கொடியில் பிரம்மன்னுடன் உதித்த ஆன்மாக்களை மயக்கும் கோவம் கொண்டவரும் திருமாலினுடைய கட்டளைப்படி இராணியின் புத்திரர் அறுவரையும்,தேவகி வயிற்றில் விட்டுச் சிசுவாகப் பிறக்கச் செய்து தான் மட்டும் யசோதையின் வயிற்றில் பிறந்து,தேவகியிடம் சென்று இருந்தபொழுது,தன்னைப் பற்றிக் கொல்ல முற்பட்ட கம்சனை மார்பிலுதைத்து ஆகாசம் அடைபவள் அங்குள்ள அவளை இங்கு கொண்டு வந்து வளர்ப்பீகளாக என்று உடன் வழிநின்று கட்டளையிட்ட கருணை கடலாம் கண்ணபிரான்.

Salt and pepper Offerings

உலகுய்யப் பிறந்த கண்ணன் உற்றமுறையில் யசோதையிடம் வளர்ந்து வருங்கால் தன்னைக் கொல்லும் நோக்குடன் பால்தர முற்பட்ட பூதகியையும் அவள் கணவன் பூதனையும் கொன்று,சகடா சூரனையும் திருவாவர்த்தனைக் கொன்று பெருந்தவ முனிவரும் சாக்கியரால் தமக்கு நாமகரணம் செய்யப் பெற்றும் ,ஆயர்பாடியிலுள்ள கோபியர்களின் நவநீதம் உண்டும்,அங்கு விளையாடும் குழந்தைகளைபோல் கண்ணன் மண் உண்ட காட்சியை யசோதை கண்டார்.

கண்ணனை அச்சுறுத்த நிலையில் கண்ணன் தன் தாய்க்குத் தான் மண் சாப்பிடவில்லை என்பதைக் காட்டும் முறையில் தனது வாயைத் திறந்து தன் முன் அடங்கிய அண்டங்கள் அனைத்தையும் அன்னை யசோதை அறியக்காட்டியவன் கண்ணன் ,அதே நேரத்தில் மாயையானவன்.

வாசுதேவரால் கண்ணன் என்ற குழந்தை இரவோடு இரவாக ஆயர்பாடிக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது பெரும் மழைக்கும் பேரிடிக்குமிடையே ஆதிசேசன் படம் எடுத்துக் குடைபிடிக்க,கங்கையாறு விலகி வழி விட கிருஷ்ணன் என்ற குழந்தை யசோதை இல்லத்தில் விடப்பட்டு அங்குள்ள மாயை என் குழந்தையைப் பரமாத்மாவின் அசரீரி சொற்படி தேவகியிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது .

தனது வாக்குறுதியை காப்பாற்ற வாசுதேவர் எட்டாவது குழந்தை பிறந்ததை பற்றி கம்சர்க்கு தகவல் கொடுத்தார்.அதைக்கேட்ட கம்சன் சினங்கொண்டு சுடுசொல் பேசி என்னைக் கொல்லத் தோன்றிய அற்ப சிசுவே உன்னை கண்ட துண்டமாக்கி மீள்வேன் என்று கூறி,சிறைச்சாலை நோக்கிச் சென்ற கம்சன் தேவகி கையிடத்து வைத்துள்ள குழந்தையைப் பறித்தான்.பெண் சிசுவாக இருந்ததைக் கண்டு ஆண்மையற்ற ஒரு சிசு என்னைக் கொள்வதா? அதனை நான் விட்டு வைப்பதா? என்று அங்கம் முழுவதும் பொங்கும் சினத்தால் அச்சிசுவை ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதவிடமுற்பட்டான் அதிகாலை சூரபத்மன் வெற்றிவேல் முருகனிடம் போரிட்டு,படைபலமிழந்து தவித்து நின்ற காலத்தில் அவனுக்கு உதவும் நோக்கோடு சிறந்த சைனியங்களை எழுப்ப மிரகசஞ்சீவி இருக்கும் இடம் கூறி மறைந்தவளும் சம்பரனின் தேவியாக விளங்கியவளும் சக்தியின் குணவடிவம் ,தவம்,மோகம்,அவித்தை அனித்தம், ஆகியவற்றால் உண்டாகின்ற பல்வேறு ஆற்றலையும் உயிரினங்களுக்கு வரும் தீமையை நீக்குகின்ற ஆற்றலை பெற்றவளுமான அந்த மாயவான் வழியிருந்து கம்சனை நோக்கி பாவத்தின் திருவுருவே உன்னைக் கொல்ல உதித்தவன் என்னை ஒத்த பேராற்றல் மிக்கவன் ! நந்தகோபன் மனையில் வளர்ந்து வருகிறான்.உன்னையும் உன்னால் உருவாகும் தீமை அனைத்தையும் ,நீ செய்யும் தவறுகள் பலவற்றையும் அவன் அழித்தே தீருவான் என வான்வழி நின்று கூறி ஆன பல்லுயிரும் காக்க,அவ்விடம் விட்டு அகன்று இங்கு வந்து அமர்ந்தவளே அன்னை பவானி.

Leave a Reply