அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள்

ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள்,

இத்தலங்கள் சமயக் குரவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் “அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே,”

அவையாவன:

1) திருப்பறியலூர்  :  

தடச்கன் யாகம் அழித்த ஸ்தலம்

2) திருக்கண்டியூர் :

 தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்த ஸ்தலம்.

3) திருவதிகை:

முப்புரம் – மும்மலங்கள் – திரபுர சம்காரம் செய்த ஸ்தலம்.

4) திருக்கோவிலூர்:

பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகாசூரனை வதம் செய்த ஸ்தலம்.

5) திருக்குறுக்கை:

காமதகன மூர்த்தி யாகி காமனை – மன்மதனை எரித்த ஸ்தலம்.

6) திருக்கடவூர்:

சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை – கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம்.

7) திருவழுவூர்:

கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோலினை அணிந்த தலம்.

8) திருவிற்குடி:

சலந்திர ஸ்தலம் (தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையை அறிந்த ஸ்தலம்) ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது.

 

Pooja Vastram – Orange Cotton Dhoti with Red Border

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *