ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதற்குக் காரணம்

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்?

பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது.

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.

அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்… ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.

அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்… கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.

 

Pooja plate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *