கோயில் மணி ஓசை… சத்தத்துக்குப் பின்னால் இருக்கும் சயின்ஸ்..!

கோயில் மணி ஓசை… சத்தத்துக்குப் பின்னால் இருக்கும் சயின்ஸ்..!

கோயிலோ, வீடோ… நம் வழிபாட்டு முறையில் தவிர்க்க முடியாத ஒன்று மணியோசை. வேதங்கள் கோயில் மணி, கடவுளிடம் நாம் உள்ளே செல்ல அனுமதி கேட்கவே வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. ஆனால், இந்த மணிகளில் மறைந்துள்ள உண்மையான அறிவியல் வேறு.

மணி ஓசை நமது உளவியலுடன் ஆழமானத் தொடர்புடையது. மணி என்பது ஒரே ஒரு உலோகத்தால் ஆனது அல்ல. அதன் உருவாக்கத்தில் பல உலோகங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அவை கேட்மியம், ஈயம், துத்தநாகம், தாமிரம், நிக்கல், குருமம் மாற்றும் மங்கனம். இந்த உலோகங்கள் மிகவும் தனித்துவமானவை. ஒவ்வொரு உலோகமும் தனக்கே உரிய குணாதிசியங்களைப் பெற்றுள்ளது. இத்தனை சக்திகளும் ஒன்று சேர கிடைக்கும் ஓசைதான் அந்த மணியின் ஓசை. மணிக்கே உரிய ஓசையின் காரணியாக திகழ்வது இந்த உலோகங்களே. இந்த மணியின் ஓசை நமது உடலுக்குள் ஊடுருவி மனதை அமைதி அடைய செய்கிறது.

வலது கையை உபயோகிக்கும் மனிதர்களுக்கு இடது மூளையின் செயல்பாடு அதிகம் இருக்கும். அதுபோலவே, இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது மூளை. இரு கைகளையும் உபயோகிக்கும்போது, நமது மூளை முழுமையாக பணிபுரியும். அதெல்லாம் சரி… இந்த மணியின் ஓசைக்கும் நமது மூளை செயல்பாட்டுக்கும் என்னத் தொடர்பு? மணியின் ஓசை ஒரு வகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நமது மனதுள் ஊடுருவி, மூளையில் உள்ள வலது மற்றும் இடது பாகங்களை முழுமையாக தூண்டுகிறது. இதனால் நமது மூளை மிகவும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை அடைகிறது. இதுவே, பிரார்த்தனையினால் நல்லவையே நடக்கும் என்ற ஒரு விதமான மனவுறுதியை ஏற்படுத்துகிறது.

மணியின் ஓசை சுமார் ஏழு வினாடிகளுக்கு நமது மூளைக்குள் நின்று எதிரொலிகளை ஏற்படுத்துகிறது. இந்த ஏழு வினாடிகளில் நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டுகிறது. இந்த மணியின் ஓசை நமது மனதில் உள்ள அனைத்து வகையான எண்ணங்களையும் மறக்கச்செய்து, நமது மனதை வெற்றிடமாக மாற்றுகிறது. இந்த நிலையில், நமது மனது மிகவும் அதிகமாக கிரகிக்கும் தன்மையை பெறுகிறது. மனதினுள் புதைந்துக் கிடக்கும் பல விஷயங்களை முற்றிலுமாக வெளியேற்றி, உண்மை நிலைக்கு நம்மை தயார்ப்படுத்தும். அப்போதுதான் தூய்மையான எண்ணங்கள் மனதில் ஈடேறும். ஆகவே, கோயிலுக்குள் செல்லும் முன்பு, நமது மனதை தயார்ப்படுத்த மணிகள் கட்டப்பட்டு அவற்றின் ஓசையை ஏற்படுத்துகிறோம்.

Hanging Bell-Big size

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *