சிவனுக்கு உகந்த 8 விரதங்கள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.

1. சோமவார விரதம்  – திங்கள் கிழமைகளில் இருப்பது

2. உமா மகேஸ்வர விரதம்  – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது

3. திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது

4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது

5. கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது

6. பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது

7. அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது

8. கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

சிவனுக்கு உகந்த எட்டு விரதங்களில் உயர்ந்தது மகா சிவராத்திரி விரதம்!

வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி  உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

இத்திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ‘வள்ளல்  பெருமான்’ இராமலிங்க அடிகள் கூறுகின்றார்.

தனித்திரு 

ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில்  கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் – மனம் தனித்து அமைதி நிலையில்  இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு

 மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம்,  குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் –  விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.

பசித்திரு

 பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே  பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

Brass Lingam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *