ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய…….

ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது. உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில்,லேசாக வைத்திருங்கள்.அது யோகத்தில் ஒரு முத்திரை.அப்போது ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .

ஓர் ஆச்சர்யம் நிகழும்.ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும்.உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள்.அது யோகத்தை முறித்தல் நிலை.அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள். அப்படிச் செய்தால் அது குறையற்ற,சுத்தமான ருத்ராட்ச மாலை.முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?

அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் . அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள்.

 

Rudhratcha Mala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *