உங்க நகத்தில் இந்த மாற்றம் உள்ளதா? எவ்வளவு ஆபத்து தெரியுமா?

Benefits :

தோல், நகம், மலம், சிறுநீர் இது போன்று ஏதாவது ஒன்றில் மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் அது நமது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.

அதில் நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து நம் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நகம் குவிந்து காணப்படுவது

நகம் சற்று மேடு போல குவிந்து காணப்பட்டால், அது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய், குடல், இதயம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளின் பாதிப்புகளை குறிக்கும்.

நகம் குழி போன்று காணப்படுவது

ஸ்பூன் குழி போன்று நகம் உள்வாங்கி காணப்பட்டால், அது இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை, இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பியின் குறைபாடு ஆகிய பிரச்சனைகளின் அறிகுறியாகும்.

நகத்தின் நிறம் மாற்றம்

நகம் வெள்ளையாகவும், நகத்தின் நுனியில் மட்டும் பிங்க் நிறத்தில் நேரோ போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறியாகும்.

நகத்தில் வரிகள் காணப்படுவது

நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்ற நோய்களின் அறிகுறியாக வெளிப்படும்.

நகங்கள் வலுவிழந்து போவது

நகங்கள் வலுவிழந்து மங்கிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் நகம் இறுக்கமின்றி தசையில் இருந்து சற்று விலகி காணப்பட்டால், அது தைராய்டு மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாகும்.

நகத்தில் மஞ்சள் நிறம்

நகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டால், அது சுவாச பிரச்சனை அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றின் அறிகுறியாகும்.

அதுவே நகத்தில் சிறிய குழிகள் மற்றும் புள்ளிகள் போன்று காணப்பட்டால், அது சொரியாசிஸ், திசுக்களின் சீர்குலைவு, முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படும்.

 

 

Panja Deepa Pooja Oil 1 Ltr

Leave a Reply