பாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி

பயன்கள்:

விஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியது கோபுரம் தாங்கி செடி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி. இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது.

வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது. கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது. பாம்பு, தேள், விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாகிறது. மலேரியா உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் குணமாக்கும்.  கோபுரம் தாங்கி செடியானது, நில வேம்புவை போன்று இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும். விதைகள் நெல் போன்று இருக்கும்.

கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். இலை, விதை, தண்டு அடங்கிய கோபுரம் தாங்கி செடி ஒரு பிடி அளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கும்போது வயிற்றுப்போக்கு, நீர்த்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

கோபுரம் தாங்கி செடி பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. வயிற்றை சுத்தப்படுத்துகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் சிறுநீர் பெருக்கியாக பயன்படுகிறது. இலையை பயன்படுத்தி முடிகொட்டுதல், முடி உதிர்தலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தேய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும்.

இது தலை சூடு, வியர்வையை தணிக்கும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி பூச்சிக்கடி, தேள்கடி, பாம்பு கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சம அளவில் இலை பசையை, கடுகு எண்ணையுடன் சேர்த்து குழம்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை பாம்பு, தேள், பூச்சிகள் கடித்த இடத்தில் மேல்பூச்சாக போடும்போது விஷம் தணிக்கிறது. கடி வாயில் பூசினால் வலி, வீக்கம் குறையும்.

நன்மை தரக்கூடிய கோபுரம் தாங்கி செடிகள் நீர்பாங்கான இடங்களில் புதர்போல் வளர்ந்து இருக்கும். இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும்போது தலைவலி சரியாகும். முடி வளரக்கூடிய தைலமாகவும் பயன்படுகிறது. மருத்துவ குணத்தை கொண்ட வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும்போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது. சோர்ந்த உடலுக்கு பலம் தருவதாக அமைகிறது.

 

Metallic Tower Agarbatti Holder

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *