அறு சுவைகளின் பண்புகள் என்ன… உடலுக்கு விளையும் நன்மை என்ன?

அறுசுவை  எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய  மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவை,  துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு  ஆகியனவாகும்.

ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச்  சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.
இனிப்பு,  புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த  ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும்  சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து  வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில்,  சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது இரத்தம், தசை,  கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக்  கொண்டது என்பதனால், உடலை ‘யாக்கை’ என்று கூறினர்.

இதில் ஏழாவது தாதுவான  மூளை சரிவர இயங்க, முதல் ஆறு தாதுக்களும் தகுந்த அளவில் இருத்தல் அவசியம்.  இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
இனிப்பு – தசையை வளர்க்கின்றது
புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு –  ரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது
அக்கால  மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே, இருந்து  வந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய, அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத்  தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று  சொல்வார்கள்.இந்த 6 சுவைகளைப் பற்றியும் இப்போது தனித்தனியாக  பார்க்கலாம்.

Betel Nuts 100g

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *