Healthy foods for tamils

ஆரோக்கியமான உணவு முறையை அமல்படுத்துவது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால் இந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்க நாம் கஷ்டபட்டுக் கொண்டு தேவையில்லாத காரணங்களைச் சொல்கிறோம்.

இந்தியர்களின் உணவு என்பது மிக சுவையானதாகவும் அதேசமயத்தில் மிக ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்பது யாரும் மறக்க முடியாத ஒன்று. நீங்கள் ஆரோக்கியமான இந்த உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த 4 உணவுகளை சுவைக்க வேண்டும்.

தோசை:

தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவான இந்த தோசை உளுந்து, அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறைந்த கேலரியும் அதிகமான தாது சத்து, வைட்டமின், புரோட்டின் நிறந்த உணவு இது. மேலும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் முக்கிய உணவும் இந்த தோசைதான்.

தற்போதைய சூழலில் நீங்கள் கஷ்டப்பட்டு தோசை மாவை அரைக்கத் தேவையில்லை. கடையில் தற்பொழுது கிடைக்கும் திடீர் தோசை மாவை பயன்படுத்தி சுலபமாக தோசை செய்து சாப்பிடலாம்.

இட்லி:

வைட்டமின் நிறைந்த உணவுதான் இந்த இட்லி. தாது சத்து, கார்போஹிட்ராட் கொண்ட இந்த இட்லி உங்கள் உடல் இளைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் இந்த உணவு நீராவியால் அவிக்கப்படுகிறது. எண்ணை இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த உணவு ஜீரணத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

சப்பாத்தி:

சப்பாத்தி அல்லது ரொட்டி கோதுமை/ மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு உங்களின் ஜீரணத்திற்கு, உடல் இளைப்பதற்கு மற்றும் இருதய நோயை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் தினமும் சப்பாத்தி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் அபாயம் குறைவதோடு மலச்சிக்கள் பிரச்சனையும் தீர்க்கிறது.

Related image

உப்புமா:

தென்னிந்தியர்களின் மற்றுமொரு ஆரோக்கியமான உணவு இந்த உப்புமா. ரவா மற்றும் சுஜி மாவால் தயாரிக்கப்படும் இந்த உணவு பலவகையான சத்துக்கள் நிறந்தது. வைட்டமின் B, இரும்புச் சத்து, பொட்டாசியும் நிறைந்த இந்த உப்புமா உங்களின் சிறுநீரகப்பையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் ரவா மாவில் நிறந்துள்ள இந்த தாது சத்து உங்களின் நரம்புகளின் செயல்பாடுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இந்தியர்களின் உணவு முறையே ஆரோகியமான வாழ்க்கை முறையை உங்களுக்கு வழங்குகிறது.

 

ACD Anahata Bhajans

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *