எண்ணெய் குளியல் எதற்கெல்லாம் நல்லது தெரியுமா…!

எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.
அழகை பராமரிக்கத் தேங்காய் எண்ணெய், கபம், வாதம், பித்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க நல்லெண்ணெய், தசைகள், மூட்டுகளின் வலிமைக்கு விளக்கெண்ணெய் ஆகியவற்றை எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
எண்ணெய்க் குளியலுக்கு உகந்தது அதிகாலை நேரம். அந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படுவதால் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலுக்கு  வைட்டமின்டி சத்து கிடைக்கிறது.
எண்ணெய்க் குளியலுக்கு மிதமான சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் சேர்த்த ஷாம்பு, சோப்புகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான  அரப்பு, சீயக்காய், கடலை மாவு, பயத்த மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிக்கலாம்.
எண்ணெய்க் குளியலின் பின் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்க் குளியலின் வழியாகக் கிடைக்கும் பிராண  சக்தியை உடல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் தசை, எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. குழந்தையின்மை பிரச்னைக்கான வாய்ப்புகளைக்  குறைக்கிறது. மன அழுத்தத்தையும் நீக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *